ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசி ஜடேஜா அசத்தல்
இந்திய கிரிகெட் டெஸ்ட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடஜா ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்து விளசியுள்ளார். சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற T20 போட்டியில், ஜாம்நகர், அம்ரோலி அணிகள் மோதின.
ஜாம்நகர் அணியில் இடம்பெற்ற ஜடேஜா, ஆட்டத்தின் 15 வது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். 69 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டிரிகளையும் விளாசினார். ஆட்டத்தின் 19 வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் ஜாம்நகர் மாவட்ட அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 239 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அம்ரேலி அணி களமிறங்கியது.
யாரும் நிலைத்து நின்று ஆடாததால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து, ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.