ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாஷ்தூன் பழங்குடியின மக்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட்டம்…!
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பஷ்தூன் பழங்குடியின மக்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பெஷாவர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையோரப் பகுதிகளில் பஷ்தூன் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பாகிஸ்தான் ராணுவமே தாக்குதல் நடத்தியதுடன், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, பஷ்தூன் பழங்குடியின இளைஞர்களை அடிக்கடி பிடித்துச் சென்று போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடக் கோரி, நேற்று பெஷாவர் நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.