ஒபாமா உதவியாளரை ட்விட்டரில் கிண்டலடித்த நச்சத்திர பெண்..!
டிவி நட்சத்திரம் ரோஸன்னி தனது ட்வீட்டரில் நிறவெறியோடு ஒபாமா உதவியாளர் குறித்து வெளியிட்ட கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பங்கேற்று வழங்கிவந்த நகைச்சுவை டிவி நிகழ்ச்சி திடீர் ரத்தாகியுள்ளது.
ஏபிபி நெட்வொர்க் சேனல் இந்த டிவி நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டதாக ரிபோர்ட்டர்ஸ் சிஎன்என்.காம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏபிசி நெட்வொர்க் சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ரோஸன்னி ட்விட்டர் அறிக்கை வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. நாங்கள் கொண்டுள்ள விழுமியங்களுடன் சற்றும் பொருந்தக்கூடிய வகையில் அவரது ட்விட் அமைந்திருக்கவில்லை. இதனால் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் உதவியாளர் வலெரீ ஜெரெட் பற்றி, ட்விட்டரில் ரோஸன்னி பதிவிட்ட கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார். தான் ட்விட்டரை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பார்வையாளர்களின் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டுள்ளது ரோஸன்னிக்கு அதிர்ச்சியைத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.