ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா வீடியோ மூலம் வாக்கு சேகரிப்பு….!!
தெலங்கானா மக்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காங்கிரஸை உள்ளடக்கிய மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் கூட்டணியாக ஓர் அணியில் உள்ளன. ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் முடித்துள்ள நிலையில், சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாததால் நேரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் தெலங்கானா வாக்காளர்களிடம் சோனியா காந்தி வாக்கு கேட்கும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு தானும் முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த சந்திரசேகர ராவ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தெலங்கானா மக்கள் தங்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் விரும்பங்களை பூர்த்தி செய்ய இதுவே சரியான தருணம் என்றும், இதில் தெலுங்கானா எதிர்காலம் மட்டுமில்லாமல் உங்களது எதிர்காலமும் அடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
We made a promise to form the state of Telangana & we fulfilled that with the help of the people, that is the Congress way – to deliver on our assurances. Today we promise you a government that will stand with every section of society & will represent the people of Telangana. pic.twitter.com/HbNgz0HB0q
— Congress (@INCIndia) December 4, 2018