ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் துவங்கியது அஷ்வினை விட்டுகொடுத்த சென்னை…!!
பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பின்பற்றப்படும் சில விதிமுறைகள் இதோ ஏலத்தில் வீரர்களை வாங்க ஒரு அணி ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களின் விலை ரூ.80 கோடியில் இருந்து கழிக்கப்படும். ஒரு அணியில் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு அணி 25 வீரர்களை வைத்து கொள்ளலாம். மேலும், தற்போது துவங்கியுள்ள ஏலத்தின் முதல் சுற்றில், ஆர்.அஸ்வின் அவர்கள் ‘கிங்ஸ் எக்ஸ்.ஐ. பஞ்சாப்’ அணியில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.