ஐஸ்லாந்து நாட்டில் பிட்காயின் திருட்டுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர் பிரதமர் சென்ற விமானத்திலேயே தப்பிய வினோதம்!
பிட்காயின் திருட்டுக்காக, ஐஸ்லாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர் அங்கிருந்து தப்பிப் பிரதமர் பயணம் செய்த விமானத்திலேயே சுவிட்சர்லாந்து சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்லாந்தில் இணையத்தின் மூலம் பிட்காயின் திருட்டில் ஈடுபட்டவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பலத்த காவலையும் மீறிச் சிறையில் இருந்து தப்பிய அவர் விமானம் மூலம் சுவிட்சர்லாந்தின் ஸ்டாக்கோம் நகருக்குச் சென்றுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
ஸ்டாக்கோம் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக ஐஸ்லாந்து பிரதமர் காத்ரின் ஜேக்கப்ஸ்டாட்டிர் தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அதேவிமானத்தில் தான் பிட்காயின் திருடனும் சென்றதாகத் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற பிட்காயின் திருடனைப் பிடிக்க சுவிட்சர்லாந்து காவல்துறையின் உதவியை ஐஸ்லாந்து காவல்துறையினர் நாடியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.