ஐபிஎல் திருவிழா தொடங்கியது : பெங்களூருக்கு நெஹரா உள்பட புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
ஐபிஎல் திருவிழா இந்த வருடம் ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்க்கு ஒவ்வொரு அணியும் அவரது சொந்த அணி வீரர்களில் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். மேலும் 2 வீரர்களை மேட்ச் கார்டு மூலம் ஏலத்தின் போது பெற்றுகொள்ளலாம். என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தள்ளது. இந்த விவரங்களை நாளைக்குள் (ஜன 4) சமர்பிக்கவேண்டும். இந்த மாதம் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியும் தனது பயிற்சியாளரை நியமிப்பது, வீரர்களை தக்க வைப்பது என பிசியாக வேலை செய்து வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும், பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹராவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இவர்கள் அணியின் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், நியூசிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளர்களை டேனியல் வெட்டோரி வரவேற்றுள்ளார்.
source : dinasuvadu.com