ஐந்தறிவு உள்ள மிருகங்களே இப்படி செய்யல…? ஆறறிவு மனிதன் ஏன் இப்படி செய்றான்..? : ஹெச்.ராஜா கேள்வி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு வழங்கியது அனைவரும் தெரிந்ததே. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் தீர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலந்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் கூறியபோது, ‘ முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினச்சேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி ? இதற்க்கு பதில் என்ன சொல்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்க்கு பதிலளித்துள்ள ஒரு ட்விட்டர் பயனாளி, ” சாதி,மதம் என்ற பிரிவினை மனிதனிடம் மட்டும் ஏன் இருக்கிறது” என்று இதுவரை தங்களிடம் யாரும் கேட்கவில்லையா ? கேட்டதில்லையா? கேட்பார் யாரும் இல்லையா ? என்று கூறியுள்ளார்.