ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை: கோலி சரிவு, ஸ்மித் முதல் & ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேற்றம்…!!
இந்த வார தொடக்கத்தில் 67 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவின் கேப்டன் விராத் கோஹ்லி 3 வது இடத்திற்கு கைப்பற்றினார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 5 & 28 ரன்கள் எடுத்தார். இதேபோல் இந்திய அணியின் புஜாரா (நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் 26 மற்றும் 4) 848 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளார் .ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.அதேபோல் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்துகேப்டன் ஜோ ரோட் 881புள்ளிகள் பெற்று சுமார் 66-புள்ளிகள் பின்தங்கி 2வது இடத்தில் உள்ளார். நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் 855 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
சிறந்த பத்து பேட்ஸ்மென்:
1. S.P.D. ஸ்மித் AUS 947
2. J.E. ரூட் ENG 881
3. வி. கோலி IND 880
4. K.S. வில்லியம்சன் NZ 855
5. சி.ஏ. புஜாரா IND 848
6. டி.ஏ. வார்னர் (AUS)- 827
7. அஸ்ஸார் அலி (PAK)- 755
8. L.D. சந்திமால் (SL) – 743
9. A.N. குக் (ENG)- 742
10. H.M. அம்லா (SA)- 740