ஐகேன் என்ற சமூக சேவை அமைப்புக்கு இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது…!!
அணு ஆயுத ஒழிப்பிற்காக போராடி வரும் ஐகேன் என்ற சமூக சேவை அமைப்புக்கு இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டு தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐகேன் அமைப்பின் இயக்குநர் பியாட் ரிஸ்ஃபின் உலக அமைதி நோபல் பரிசுக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்த ஐகேன் அமைப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இது சுமார் 101 நாடுகளை சேர்ந்த 468 தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.
அணுஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றினை இந்த அமைப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்தது. இதில் 122 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.