ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆசியாவுக்கு ஏற்படும் ஆபத்து
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களது இருப்ப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதால், ஆசிய நாடுகளுக்கு ஆபத்து வரும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது உள்ள சூழலில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எந்தொரு தனியிடமும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தனியாக ஆட்சி செய்து வந்தனர். ஆனால் தற்போதைய அமெரிக்க மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் சில அதிரடி நடவடிக்கைகளால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. அதனால் தற்போது ஆப்கானிஸ்தான் நோக்கி குடிபெயர்ந்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.