ஏவுகணை நாயகன் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவரின் புகழை பாடுவோம் கவிதைகளாக
ஏவுகணை நாயகன் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களை நேசிப்போம் ,அவரின் புகழை பாடுவோம் கவிதைகளாக ..
தென்கோடி தமிழனாய் பிறந்து,
இந்தியனாய் வளர்ந்து,
எட்ட முடியாத சாதனைகள் பல புரிந்து,
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த
குழந்தை பிரியனே ஏவுகணை சிகரமே………
எங்களை கனவு காணச்சொல்லிவிட்டு
கனவு நனவாகும் முன்னரே அவசரப்பட்டு
விட்டீர்களே கலாம் அவர்களே……
நீங்கள் பேசிக்கொண்டிருந்ததால் தானே
நாங்கள் மௌனம் காத்தோம்
இனி பேசி பயன் இல்லை என்று
பேசாமலே சென்று வீட்டீர்களோ???
நீங்கள் கனவு காணசச்சொன்னதால்
தானே நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம்…
எத்தனையோ கனவுகள் கண்டோம்..
ஒரு போதும் கண்டது இல்லையே
நீங்கள் காலமாவது போல்
கண்டிருந்தால் காலமாக்கி இருப்போம்
உங்களை கொல்ல வந்த காலனையே
கலாம் தான் வேண்டும் என்று நாங்கள் விரும்புவது போல்
கலாம் தான் வேண்டும் என்று மரணமும் விரும்புகிறதோ….
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்
என்று சொன்னதோடு இல்லாமல்
சாதித்து காட்டிய சகாப்தமே!!!
இதுவரை யாரும் கண்டதில்லை
உங்களை போல் ஒரு ஏவுகணை சிகரத்தை
உங்கள் கனவு நனவாகும் காலம்
வெகு தூரம் இல்லை…….
DINASUVADU