ஏப்ரல் 6ம் தேதி அன்று மும்பையில் ஐ.பி.எல் தொடக்கம்
11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 6ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இறுதிப்போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் 27ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து.விளையாட்டுகள் இந்த ஆண்டு சற்று வேறுபட்ட நேரத்தில் நடைபெறும். இரவு நேர போட்டிகள் இரவு 7 மணி முதல் ஆரம்பமாகும். மாலை நேர போட்டிகள் 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு தொடங்கும். மேலும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது