ஏசியன் கேம்ஸ் : 800.மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி…!!!
இந்தனோசியாவில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் மஞ்சித் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், அதேபோட்டியில் இந்தியா வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். இதுவரை, 9 தங்கம், 21 வெண்கலம், 17 வெள்ளி என 47 பதக்கங்களுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.