ஏசியன் கேம்ஸ் : 8 வது இடத்தில் இந்தியா ..!!
இந்தனோசியாவில் நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்க பதக்கங்களை கைப்பற்றியது. இதில், ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில், அரபிந்தர் சிங் தங்கம் வென்றார். இதேபோல் ஹெப்டத்லான் போட்டியிலும் இந்தியா வீராங்கனை ஸ்வப்னா பரமன்தங்கம் வென்று அசத்தினார். இதுவரை 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 54 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 8 வது இடத்திற்கு முன்னேறியது.