எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை தாண்டி பரவிய கிலாயு எரிமலையின் புகை!26 வீடுகள் நாசம்!2000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை தாண்டி,ஹவாய் தீவில் கிலாயு எரிமலை அண்மையில் வெடித்து சிதறியதை தொடர்ந்து, புகை பரவியுள்ளது. எரிமலை வெடிப்பால் இதுவரை 26 வீடுகளில் நாசமாகின.
பல மைல் தூரத்திற்கு லாவா பரவியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரும்சாம்பல் புகை விண்ணை மூடியுள்ளதால் வான்வழி போக்குவரத்தை பாதிக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரசாயன வாயுக்கள் வெளியேரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.