எளிதாக வென்றது பாகிஸ்தான் அணி..!!
ஹாங்காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான்..
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ஹாங்காங் அணியின் நிஜாகட் கான், கேப்டன் அன்ஷுமான் ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் நிஜாகட் கான் 13(11) ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அன்ஷுமான் ராத் 19(34) ரன்னிலும், கார்ட்டெர் 2(14) ரன்னிலும், ஹயத் 7(29)ரன்னிலும், எக்ஷான் கான் (0), ஐஜாஸ் கான் 27(47) ரன்னிலும், மெக்கென்சி (0), அஃப்ஜல் (0), கின்சிட் ஷா 26(50) ரன்னிலும், நவாஸ் 9(21) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில், நதீம் அகமது 9(11) ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, ஹாங்காங் அணி 37.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக, உஸ்மான் கான் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி, சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 117 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் பாபர் அசாம் 33(36) ரன்னில் வெளியேறினார். இறுதியில் சிறப்பாக விளையாடிய இமாம்-உல்-ஹக் 50(69) ரன்களும், ஷாகிப் மாலிக் 9(11)ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஹாங்காங் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. ஹாங்காங் அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷான் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.