எலினா சுவிட்டோலினா இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் வெற்றி!
மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியன் எலினா சுவிட்டோலினா இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் வெற்றிபெற்றுப் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ரோமில் நடைபெற்ற இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் எலினா சுவிட்டோலினா, ரோமேனியாவின் சிமோனா ஹாலேப் ஆகியோர் விளையாடினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆறுக்குப் பூச்சியம், ஆறுக்கு நான்கு என்கிற நேர் செட் கணக்கில் எலினா சுவிட்டோலினா வெற்றிபெற்றுப் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.