எலிக்கு தங்கப் பதக்கம்… PDSA அமைப்பு வழங்கி சிறப்பு….
உலகில் முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்ற எலி.
இங்கிலாந்து நாட்டில் கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா (Magawa) என்னும் எலிக்கு இந்த சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள PDSA என்னும் தொண்டு நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து விலங்குகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு செய்து வருகிறது. இதுவரை இந்த அமைப்பு நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு எலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இதுவே முதல்முறையாகும். மகாவா இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.