எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய தொழில்நுட்பம்…!விமானத்தில் இருக்கைத் தேர்வில் முப்பரிமாண முறை…!
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் விமானத்தில் இருக்கைத் தேர்வில் முப்பரிமாண முறையைப் புகுத்தும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது.
ஹாம்பர்கில் நடைபெற்ற கிரிஸ்டல் கேபின் விருதில் இந்த வாரம் 3D SeatMapVR தேர்வாகியுள்ளது. விமானத்தில் இருக்கை தேர்வு செய்யும் பயணி ஒருவர், தாம் அமரும் இருக்கையின் அடியில் கால் வைப்பதற்கான இடம் எவ்வளவு உள்ளது, அருகில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்பதை இருக்கையில் அமர்வது போன்றே வர்ட்சுவலாகக் கண்டு சிறந்த இருக்கையைத் தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் சாதாரணமாக இருக்கையைத் தேர்வு செய்தபின், வாடிக்கையாளர்கள் குறைகூறி இடம் மாறக் கோருவதைத் தவிர்க்க முடியும் என நம்பப்படுகிறது. 360 டிகிரியிலும் சுழன்று இருக்கையின் இருப்பைக் காண்பிக்கும் முப்பரிமாண தேர்வு முறையை எமிரேட்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.