எபோலா வைரஸ்…200 பேர் சாவு…பீதியில் காங்கோ நாடு…!!

Default Image

காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இப்படி அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி ஒளி இலுங்கா கூறினார்.

காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்