“என்னால் சாதிக்க முடியும்” அழுத்தமாக கூறிய ஜடேஜா..!!
ரவீந்திர ஜடேஜா. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளின் பிளேயிங் லெவனில் தவறாமல் இடம் பிடிபார். ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தார். இந்தநிலையில், ஆசியக் கோப்பை தொடருக்காக அவர் இந்திய அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார் ஜடேஜா. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் காலியாக இருக்க முதல் போட்டியிலேயே ஜடேஜாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைத்தது.
போட்டிக்குப் பின் பேசிய அவர், “இந்த கம்பேக்கை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன். ஏனெனில் 480 நாள்களுக்குப் பின்னர் நான் அணிக்குத் திரும்பியிருக்கிறேன். இதற்கு முந்தைய இடைவெளிகள் இவ்வளவு நீளமானது அல்ல’’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் யாருக்கும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னால் என்ன சாதிக்க முடியும் என்பதை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை. எனக்கு நானே புதிய சவால்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை’’ என்று பேசியிருக்கிறார்.
DINASUVADU