எட்டு மாதங்களாக நடந்த ஆர்கே நகர் இடைதேர்தல் : 2017 ஆர்கே நகர் ஓர் ரீவைண்ட்

Default Image

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு தேர்தல் நடத்துவதற்குள் தேர்தல் ஆணையமே ஸ்தம்பித்து போனது. அந்த அளவுக்கு கட்சிகளின் டார்ச்சர் இருந்தது. இந்த தொகுத்திக்கு தேர்தல் நடக்குமா என ஆர்கே நகர் மக்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் பலர் தங்களுக்கு ஆர்கே நகரில் ஒட்டு இல்லையே என வருத்தப்பட்டனர். காரணம் அந்த அளவுக்கு பணபட்டுவாடாவும் படு ஜோராக நடந்தது. இந்த பணபட்டுவாடா தான் தேர்தலை ரத்து பண்ணவே காரணமாக அமைந்தது.

முதலில் ஏப்ரல் மாதம் ஆர்கே நகரில் இடைதேர்தல் நடத்த திட்டமிட்டது. இந்த தேர்தலில் TTV.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தனி அணியாகவும், ஒ.பன்னீர்செல்வமும் தனி அணியாகவும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் தனி தனியாக போட்டியிட்டதால் இரட்டை இல்லை சின்னம் இருவருக்கும் இல்லாமல் தனித்தனி வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். பிறகு நடந்த பணபட்டுவாடா புகாரில் தேர்தலையே நிறுத்தி விட்டது தேர்தல் ஆணையம்.

அதன் பிறகு நீதிமன்றம் இந்த தொகுதிக்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நாடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதன் பேரில் மீண்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த எட்டு மாத இடைவெளியில் எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு களத்தில் குதித்தன. தினகரன் சுயேட்சையாக களத்தில் குதித்தார். மேலும் இது போதாதென நடிகர் விஷாலும் களத்தில் குதித்து விறுவிறுப்பை கூட்டினார். கடைசியில் நடிகர் விஷால் மனு பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தள்ளுபடி என அறிவிக்கபட்டது.

இபிஎஸ்-ஓபிஎஸ் அதிமுக சார்பில் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்திலும், தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்திலும், திமுக பல கட்சி ஆதரவுடன் மருது கணேஷை களம் இறக்கி தேர்தல களத்தின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்து கொண்டனர். ஆர்கே நகரில் முன்பில்லாத  அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. அப்படி இருந்தும் பனாட்டுவாடா நடக்கத்தான் செய்தது.

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு நடந்த தேர்தலில் விறுவிறுப்பே இல்லாமல் TTV.தினகரன் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். தினகரன் 89,019 வாக்குகள் பெற்று சரித்திர வெற்றியை பதிவு செய்தார். ஆளும் கட்சியான அதிமுக அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டேப்பசிட்டை இழந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்