எடப்பாடி அரசை "ஆட்டவோ ,அசைக்கவோ"அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
எடப்பாடி அரசை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 5 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது.
விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க விரைவாக அறிவிக்கப்பட உள்ளது.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் (சீவலப்பேரி தலைமையிடம்) திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெற்று விரைவில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.எடப்பாடி பழனிசாமி அரசை எந்த கொம்பனாலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. 46 வயது உடைய இளைய வயது கட்சியை முதிய கட்சி, புதிய கட்சி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.
காவிரி நீர் கேட்டகாலம் போய் தற்போது காவிரி நீர் வேண்டாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. நக்கீரன் கைது பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. சசிகலாவின் உறுப்பினர் கார்டு புதுப்பிக்கப்பட வில்லை.பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு உயர்த்தவில்லை. டீசல்- பெட்ரோல் விலை உயர்ந்தாலும் மக்களை பாதிக்க கூடிய எந்த விலைவாசி உயர்வும் இல்லை. மற்ற மாநிலங்களை போல் பெட்ரோல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
DINASUVADU