எச்சரிக்கை!சாதாரண சிகரெட்டுகளைப் போலவே இதுவும் ஆபத்து….
மருத்துவ ஆய்வாளர்கள் ஈ-சிகரெட் எனும் மின்னணு சிகரெட்களும் கல்லீரலை பாதிக்கக் கூடியவையே என எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள சார்லஸ் ஆர்.ட்ரூ (( Charles R. Drew )) மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழக தலைமை எழுத்தாளரான தியோடர் சி ஃபிரைட்மேன் ((Theodore C. Friedman)) உள்ளிட்ட ஆய்வாளர்கள் எலிகளைக் கொண்டு இதற்கான சோதனையை நடத்தினர். அதில் ஈ-சிகரெட் எனும் மின்னணு சிகரெட்களின் புகையை சுவாசித்த எலிகளின் கல்லீரல்களில் அதிக கொழுப்பு படிந்திருந்ததைக் கண்டறிந்தனர்.
12 வார பரிசோதனையின் முடிவில் அவற்றில் அபொலிபோ புரோட்டீன் ஈ ((apolipoprotein E)) என்பது உள்ளிட்ட 433 மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததோடு, அவற்றுக்கு இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்திருந்தது ஆய்வில் தெரிய வந்தது.
இதனால், சாதாரண சிகரெட்டுகளைப் போன்றே நிக்கோடின் கொண்ட ஈ சிகரெட்டுகளும், ஆபத்தானவையே என்றும், விளம்பரங்களில் கூறப்படுவது போல் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.