எங்களுக்கு இந்தியாவுடன் போரிட விரும்பமில்லை!பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் போரிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிப் கபூர் இதனை கூறினார். பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக கூறிய அவர், இதனால் தங்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது என்றார்.
கடந்த ஆண்டு முதல் இப்போது வரை இரு நாட்டு எல்லையில் 1077 முறை தாக்குதல் நடைபெற்று உள்ளதாக அவர் கூறினார். எல்லை மோதலை இருநாடுகளும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அவர் 2003-ஆம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.