எங்களுக்குள் நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்- ரஷ்ய அதிபர் எச்சரிக்கை ..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
நோட்டா கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிரிப்பு தெரிவித்து. அந்நாட்டுக்கு எதிராக போர் நடத்த தனது படைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்தது. மேலும், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிபடை ஆக்கிரமித்த டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் 2 பிராந்தியங்களை தனி சுதந்திர நாடக அறிவித்து அங்கு ரஷ்யா ராணுவம் புகுந்தது.
ரஷ்ய அதிபரின் என் இந்த முடிவுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், அமெரிக்கா , இங்கிலாந்து நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தனர். இன்று உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறுகையில், எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கையால் கணக்கில் இல்லாத அளவிற்கு மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.