உ பி யில் “என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ” ஆட்சியா…?
சாமியார் ஆட்சி என்றால் அது சாத்வீகமாக இருக்கும் என்று பலரும் நினைப்
பார்கள். ஆனால் உ பி யில் நடக்கும் பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத்தின்
ஆட்சி கொலைகார ஆட்சியாக உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஆறுமாதங்களிலேயே 431என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 பேர் மாண்டு போனார்ககள், 88 பேர் படுகாயம்பட்டார்கள்.
போலிசார் நடத்தும் என்கவுன்டர்கள் அனேகமாக போலியானவை என்பது உலகறிந்த ரகசியம். குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித்தர வேண்டியது அரசின் கடமை என்பதில் அட்டியில்லை. ஆனால் அதற்கு சட்டபூர்வ நடைமுறைகள் இருக்கின்றன. அதை விடுத்து போலிசே நீதிபதியாகி மரண தண்டனை தரக்கூடாது. அதை அனுமதித்தால் மனிதஉரிமைகள் மட்டுமல்ல, நிரபராதிகளின் உயிர்கள் பறிபோகும் ஆபத்து உள்ளது. ஆனால் இது பற்றியெல்லாம் அந்த சாமியார் முதல்வர் கவலைப்படவில்லை. என்கவுன்டர் நடத்தும் மாவட்ட போலிசிற்கு ரூ 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து மனிதர் ஊக்கப்படுத்தியிருக்கிறார்! பாசிசம் அரசுக்கு வெளியே
தனிப்படைகள் மூலமும், அரசுக்கு உள்ளே என்கவுன்டர்கள் மூலமும் தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்டியதே வரலாறு. அது இந்தியாவிலும் துவங்கியிருக்கிறது.