களைகட்ட காத்திருக்கும் தமிழர் திருநாள்.. கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை-குவியும் பாராட்டு
- நா முத்துக்குமாரின் வரிகள் வைரங்கள் என்றால் அவர் மகன் எழுதிய வரிகள் முத்துக்கள் என்று பாராட்டு.
- மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மகன் ஆதவன் பொங்கல் பண்டிக்கைக்காக தான் கைப்பட கவிதைகளை எழுதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசியரியர் நா முத்துக்குமார் அவர்கள் அவருடைய ஆனந்த யாழை…..பாடல் வரிகளை இங்கு யாராலும் மறக்கமுடியாது இவருடைய வரிகளுக்கு எத்தனையோ பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என்று சொல்வதை விட பித்துபிடித்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் அத்துணை அர்த்தம் நிறைந்த நிறைகளை கொண்டு இருக்கும் என்பது தான்.அப்படி போற்றப்பட்ட புகழப்பட்டவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார்.இவர் உடல்நிலைசரியில்லாமல் 2016-ம் ஆண்டில் தனது 41வயதில் உயிரிழந்தார்.அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகவே இன்றுவரைப் பார்க்கப்படுகிறது.அவர் விட்டுச் சென்ற இடம் இன்னமும் காலியாகவே உள்ளது மறைந்த பாடலாசிரியருக்கு ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மறைந்த நா.முத்துக்குமார் அவர்களின் மகன் ஆதவன், தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கல் பண்டிகைக்காக கவிதை எழுதியுள்ளார்.இதனை கண்டு பலரும் நெகிழ்ச்சியுடன் எதிர்கால பாடலாசிரியர் ஆதவன் என்று பாராட்டி வருகின்றனர்.
7ம் வகுப்பு படிக்கும் ஆதவன் தன் வயதிற்கு உரிய தோணியில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதைகள் போகி, தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அனைத்து பண்டிகைகளுக்கும் தனித்தனியாக கவிதை எழுதியுள்ளார்.
போகி பண்டிகை :
நீ உன் ஆணவத்தை அன்பில் எரி…!
இதைச் செய்பவனுக்கு வாழ்க்கை…சரி!
கோயிலில் இருக்கும் தேரு…!
பானையைச் செய்யத் தேவை சேறு…!
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு…!
இல்லையென்றால் வீடு ஆகிடும் காடு…!
தமிழரின் பெருமை மண்வாசனை…!
இந்தக் கவிதை என் யோசனை…!
தைப்பொங்கல் பண்டிகை :
உழவர்களை அண்ணாந்து பாரு…!
உலகத்தில் அன்பைச் சேரு…!
அவர்களால்தான் நமக்குக் கிடைக்கிறது சோறு…!
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்குப் பெரும் பாடு….!
உழவர்கள் நமது சொந்தம்…!
இதைச் சொன்னது தமிழர் பந்தம்…!
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்…!
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்…!
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு…!
நீ உன் வேட்டியைத் தூக்கிக் கட்டு…!
கரும்பை இரண்டாக வெட்டு…!
நீ உன் துணிச்சலுக்குக் கை தட்டு…!
சிப்பிக்குள் இருக்கும் முத்து…!
மாடு தமிழர்களின் சொத்து….!
மாடு எங்கள் சாமி….!
நீ உன் அன்பை இங்கு காமி…!
காணும் பொங்கல் பண்டிகை :
உறவினர்கள் வந்தார்களா என்று பாரு….!
உலகத்தில் நல்ல நண்பர்களைச் சேரு…!
நீ அழகாகக் கோலம் போடு….!
உன் நல்ல உள்ளத்தோடு….!
நீ உனக்குள் கடவுளைத் தேடு….!
இல்லையென்றால் நீ படுவாய் பாடு….!
பெண்ணைக் கண்ணாகப் பாரு….!
இல்லையென்றால் கிடைக்காது சோறு…!
என்று மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் வித்தாகிய ஆதவனின் இந்தக் கவிதை வரிகள் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து எதிர்கால பாடலாசிரியர்க்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று ஆதவனைப் பாராட்டி வருகின்றனர்.இதனால் ஆதவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.