உளுந்து வடை கேள்விப்பட்டிருப்பீங்க…!! ஆனா சாம்பல் பூசணி உளுந்து வடை கேள்விபட்டுருக்கீங்களா…?
வடை என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான். இதனை நாம் காலையில் தேநீரோடு உணவாக சாப்பிடலாம். இது நமது தமிழர்களின் பழக்கவழக்கமாக மாறி விட்டது. வடைகளில் பல வகையான வடைகள் கேள்வி பட்டிருப்போம். ஆனால் சாம்பல் பூசணி உளுந்து வடை கேள்வி பட்டிருக்கிறீர்களா? இப்பொது சாம்பல் பூசணி உளுந்து வடை செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- உளுந்து – அரை கிலோ
- பூசணி – கால் கிலோ
- கொத்தமல்லி – 3 கைப்பிடி
- கறிவேப்பிலை – 4 கொத்து
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 5
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு பஞ்சு போல அரைத்து கொள்ள வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்க வேண்டும். பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்க வேண்டும்.
பின் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசைய வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சூடான சாம்பல் பூசணி உளுந்து வடை ரெடி.