உலக பேட்மிண்டன் இந்திய வீராங்கனை பி.வி சிந்து சாம்பியம் பட்டம் வென்று சாதனை..!பேட்மிண்டனில் கர்ஜிக்கும் இந்திய சிங்கம்..!!
உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரானது சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்ற நிலையில் முதலில் இருந்த தனது அதிக்கத்தை செலுத்தி வந்த இந்திய வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதி ஆட்டத்தில்தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை பி.வி.சிந்து எதிர்கொண்டார் இருவருக்கிடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 25 23 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்திய நிலையில் தனது இறுதிப் போட்டியில் பி.வி சிந்து ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை 21-19, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.பேட்மிட்டணில் இந்தியாவின் கர்ஜிக்கும் பெண் சிங்கமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.