உயிர்பலி வாங்கும் பியூகோ எரிமலை! 109 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

Default Image

பலியானோர் எண்ணிக்கை கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், 109 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Image result for GuatemalaVolcano

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
Image result for GuatemalaVolcano
கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 99 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Image result for Fire and Ashes: Guatemala volcano consumes 69 lives, toll expected to rise
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மீட்பு பணியின்போது மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் கவுதமலா எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்