உத்தரப்பிரதேசத்தில் கோதுமைப் பயிர்கள் எரிந்து சாம்பல்!
நெல் வயல்களில் தீப்பிடித்ததில் , உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் அருகே அறுவடைக்கு காத்திருந்த கோதுமைப் பயிர்கள் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய கோதுமைப் பயிர்கள் யாவும் தீயில் கருகி விட்டன. இதனால் 5 கிராம மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.