உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை..!
உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும்.
ஆணைக் கவர பெண்கள் எத்தனையோ அடுக்கு மேக்கப்களைப் போடுவார்கள். ஆனால் உடலுறவில் ஈடுபடும் முன் துணையைக் கவர என்ன செய்ய வேண்டுமென்று தெரியாது.அதற்கான வழிகள் இதோ…
குளியல் அவசியம்
படுக்கையில் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் முன், உங்கள் மீது வியர்வை நாற்றம் வீசினால், அது மனநிலையையே மாற்றிவிடும். இதனைத் தவிர்க்க நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டியது அவசியம்.
சிறுநீர் கழிக்கவும்
உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் இருந்தால், பின் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் போது, சிறுநீர் கழிக்கத் தோன்றி, அது இருவரது மனநிலையையும் கெடுத்துவிடும். எனவே தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.
நகங்கள்
நீளமான, கூர்மையான நகங்கள் படுக்கையில் கொஞ்சி விளையாடும் போது, துணையின் உடலில் பல சிராய்ப்புக்களை ஏற்படுத்தி, காயங்களை உண்டாக்கிவிடும்.
பேசுதல்
தங்களுக்கு, தெரிந்தவற்றை வெளிப்படையாக பேசுவதும் ஒருவித சுகம் தான்.
மேற்கூறிய விஷயங்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, இவற்றுள் சில ஆண்களுக்கும் பொருந்தும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றுங்கள்.