உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்ட சிறுதானியங்கள்…

Default Image
விவசாயத்தின் மூலம் கிடைக்கும் தானியங்கள் அதிகமாக உள்ளன.அவற்றில் ஒவ்வொன்றிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன.அவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை பற்றி காண்போம்.Related image
சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத்  தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது.Image result for protein nuts
சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று  நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
Related image
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.Related image
அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப்  பாதுகாக்கின்றன. சிறு தானியங்களை சரியான நேரங்களில் தேவைக்கு ஏற்ப உணவில் சேர்த்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்