உங்கள் கூந்தல் நீளமாக…. அடர்த்தியாக…. வளரணுமா….? அப்ப இந்த எண்ணெயை தடவுங்கள்….!!!
இன்றைய இளம் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனையே கூந்தலில் ஏற்படுகிற பிரச்சனை தான். இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக இளம்பெண்கள் பல வழிமுறைகளை மேற்கொண்டு வரலாம். ஆனால் இதில் ஒரு முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.
உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் பார்ப்போம். பலவீனமான முடிக்கு, முடி மாசுபடுதல், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகிறது.
இப்பொது கற்பூர எண்ணெய் எப்படி செய்வது என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- கற்பூர எண்ணெய்
- 1 முட்டை
செய்முறை :
முதலில், ஒரு சுத்தமான கிண்ணத்தில் முழு முட்டையைச் சேர்க்க வேண்டும். பின், கற்பூர எண்ணெயைச் சேர்த்து இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலக்க வேண்டும். இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்துவதைத் தொடங்குங்கள். முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் . அது 15-20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். ஒரு லேசான சல்பேட் அற்ற ஷாம்பூ- வால் உங்கள் முடியை நன்றாகக் கழுவ வேண்டும். நல்ல முடிவுக்கு வாரம் ஒரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.