இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிற்க்கும், வங்கதேசத்திற்கும் செல்ல வேண்டும்….
இந்து மதவாதத்தையும் மற்ற மதங்களின் மீது கடும் எதிர்ப்புகளையும் சில நேரடியாகவோ பல நேரங்களில் மறைமுகமாகவும் தாக்கி பேசும் பழக்கத்தை பாஜக பலமுறை கையாண்டு வருகிறது. அதேபோல் நேற்று பாஜக தலைவர் ஒருவர் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் இடமில்லை அவர்கள் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார் பாஜக தலைவர் வினய் காதியார். அவர் மேலும் கூறுகையில்,
‘வந்தே மாதரம் மற்றும் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை அளிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இந்த தேசத்தில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது. மக்கள் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு இடம் பிரித்து அளிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கான பங்கை கொடுத்த பின்னர் அவர்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? அவர்கள் பாகிஸ்தான் அல்லது வங்காளதேசம் செல்ல வேண்டும், அவர்களுக்கு இங்கு ஒன்றும் கிடையாது,’ என கூறிஉள்ளார்.
மேலும், செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்