இளைத்தவனுக்கு எள்ளு…. கொழுத்தவனுக்கு கொள்ளு….!!!
கொள்ளுவில் அதிக அளவு அயர்ன் மற்ற பருப்புகளை அதிகமாக உள்ளது. இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏத்தும் என்பது உண்மை. கொள்ளு ஊற வைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்தது ரசம் வைத்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு சளி இருந்தால் கொள்ளுவை சூப் வைத்து சாப்பிட்டால் சளி காணாமல் போய்விடும். இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு, இது நம் உடல் வளர்ச்சிக்கும், திசு முறையாக வேலை செய்வதற்கும் உதவிக்கிறது. இது கை, கால், இடுப்பு வலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும்.
” இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு ” என்ற பழமொழிக்கு ஏற்ப உடல் எடையைம்குறைப்பதில் கொள்ளு மிக சிறந்த பங்காற்றுகிறது.