இளம் சாதனையாளர் விருதைப்பெரும் வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தரின் விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியைக்காணமுடிகிறது. 18 வயதான இவர் தனது முதல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஸ்ரீ லங்காவை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் கால் பதித்தார். தற்போது அவருக்கு ‘ரோட்டரி கிளப் ஒப் மெட்ராஸ்’, இளம் சாதனையாளர் விருதை அளித்துள்ளது. நேற்று இந்த விருதை பெற்ற அவர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்பட்டார்.அப்பொழுது மேடையில் பேசிய அவர்,” என்னை சுற்றி இருந்தவர்கள் எப்போதும் எனக்கு நல்ல ஊக்கத்தையும், நான் வளர வேண்டும் என்று கருதினார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு ஆதரவாக இருப்பதால் என் நன்றியை தெரிவிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.