இல்லற வாழ்கைக்கு உதவும் உலர் திராட்சை..
பல வகை உணவுகளுக்கு சுவைக்காக சேர்கப்படும் ஒரு பொருளாக உலர் திராட்சை உள்ளது.இதனை நொறுக்கு தினி போல வீடுகளில் குழந்தைகள் சாப்பிடுவர். இது மிகவும் சுவை உடையது.
இதில் நார் சத்து, தாதுக்கள், வைட்டமிட்ன்ஸ்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளது. அளவோடு சாப்பிட்டால் இது அதிக பலன்களை அளிக்க கூடியது. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் உலர் திராட்சையின் பயன்களை இங்கே காண்போம்.
1. செரிமானதிற்கு உதவுகிறது
உலர் திராட்சையை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் தண்ணீரில் போட்டவுடன் பெரியதாக விரிவடையும். இதில் உள்ள மலமிளக்கி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். தினமும் உலர் திராட்சை சாப்பிட்டால் குடல் அசைவுகள் சீராக இருக்கும்.
2. அசிடிட்டி
உலர் திராட்சையில் நல்ல நிலையில் அடங்கியுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அசிடிட்டியை குறைக்க பெரிய அளவில் உதவி செய்யும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றும். சிறுநீரக பிரச்னை, இதய நோய்கள், மூட்டு வீக்கம், முடக்கு வாதம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
3. இல்லற வாழ்கைக்கு உதவும்
உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கை இனிக்கச் செய்யும். உலர் திராட்சையில் அர்ஜின்னி என்ற அமினோ ஆசிட் உள்ளது. இது லிபிடோவை அதிகரிக்கச் செய்து உணர்ச்சியை தூண்டும். ஆண்களுக்கு ஏற்படும் கருவுறுதல் பிரச்னைக்கும், விறைப்பு தன்மை இல்லாமைக்கும் இது சிறந்த தீர்வாகும். ஒட்டுமொத்த ஒற்றுமை வாழக்கையும் மேம்படுவதற்கு உலர் திராட்சை உதவுகிறது. ஒவ்வொருவரின் உடலுக்கும் இது சக்தியை ஏற்படுத்தும் வேலையை செய்யும். வயதானவர்களுக்கு, புதிய தம்பதிகளுக்கும் உலர் திராட்சை மதிப்புமிக்க பயனை அளிக்கும்.
4.கண்ணனுக்கு சிறந்தது
உலர் திராட்சையில் உள்ள ஆக்ஸிடன் எதிர்ப்பான்கள் கண் பார்வைக்கு வலுசேர்க்கும். கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். கதிர்வீச்சு தாக்குதலால் தசை வளர்தல், கேட்டராக்ட் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் வைட்டமின் ஏ, ஏ&காரோடெனாய்டு, பேட்டாகாரோடெனி ஆகிய சத்துக்கள் அடங்கிய உலர் திராட்சை இதற்கு நிச்சயம் பலனளிக்கும்.
5. தோல்
தோலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் உலர் திராட்சைகளுக்கு உண்டு. உள்புற காரணங்களால் ஏற்படும் செல்கள் அழிவை இது கட்டுப்படுத்தும். தோல் சுருக்கம், மடிப்பு, முதுமை தோற்றம் போன்றவை ஏற்படுவதை தாமதப்படுத்தும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு.