இலங்கையை சூழ்ந்த வெள்ளம்..!45,000 பேர் சிக்கி தவிப்பு…!!
இலங்கை பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் சமீபத்தில் வடக்கு மாகாணத்தில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அந்த மாகாணத்தின் பல பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.சாலைகளை சூழ்ந்து வெள்ளம் வழிந்து ஓடுவதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வெள்ளத்திற்கு வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 8,500க்கும் மேற்பட்டோர் அந்த ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளது இலங்கை அரசு.மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மீட்புப் பணி அதிதீவிரமாக நடந்து வருகிறது.மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குங்கள் என்று அதிகாரிகளுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.