இலங்கையில் 42 வருடங்களுக்கு பின் தூக்குத்தண்டனை!இலங்கை அரசு திட்டம்
இலங்கையில் 42 வருடங்களுக்கு பின் தூக்குத்தண்டனை அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கை சிறையில் தற்போது 1000 -க்கும் மேற்பட்ட தூக்குத்தண்டனை கைதிகள் உள்ளனர்.இவர்களில் முக்கால்வாசி பேர் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் ஆவார்கள்.
தற்போது இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது.இதனால் கொலைகளும் நடைபெற்றுள்ளது.
இதன் காரணமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு.
முன்னதாக இலங்கையில் 1976ம் ஆண்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.