இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்கள்!
இலங்கையின் தலைநகரான கொழும்பில், அனைத்து மக்களும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ருவான் விஜேவர்தன் அவர்கள் கூறுகையில், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நன்கு படித்த, நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் என்றும், தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா சென்று மேற்படிப்பு பயின்றவர் என்றும் அவர் கூறியுள்ளார்.