இலங்கையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு…??
வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று முடிவுறும் வேளையில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையானது “சபை முடியும் வேளையில் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் ” என்பதே ஆகும் .
எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறு அவைத் தலைவர் சபையில் அறிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.