இலங்கையில் அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் தினம் கோலாகல கொண்டாட்டம்….!!
கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று இலங்கையின் அதிபர் மாளிகையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இலங்கை அதிபரான மைதிரிபால சிறிசேனா மற்றும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரின் தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.இந்த கொண்டாட்டத்தில் மக்கள் இலங்கையில் அமைதியும் வளமும் நிலைத்திருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் இன்னிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் இலங்கையின் எதிர்கட்சி தலைவர் ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழிபாடு நடத்தினர்.