இறுதி ஆட்டத்தில் மரண அடி கொடுத்த மட்டைப்பந்து வீரர்…!!!

Default Image

கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிரான  தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 1 – 3 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா தொடரை இழந்திருந்தாலும், கடைசி போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு விளையாடி வருகிறது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Image result for alastair cook

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது.  தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று இரண்டு விக்கெட் இழப்புக்கு, 238 ரன்களுடன் 278 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலீஸ்டர் குக், இந்தத் தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்