இரு மனங்களும் ஒன்றாக இணையவில்லை : இது தொண்டர்களின் கருத்து : அதிமுக
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பிறகு சசிகலா தரப்பு தங்கள் ஆதரவு MLA-க்களை வைத்து கொண்டு எடப்பாடி.K.பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
பிறகு எடப்பாடி.பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர் இதனால் கோபமடைந்த சசிகலா தரப்பு சின்னமும் கட்சியும் எங்களுக்குதான் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் ஒன்று சேர்ந்தாலும் இரு மனங்கள் ஒன்று சேரவில்லை என தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்க்கு பதிலளித்த அமைச்சர் தம்பிதுரை அது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் இருவரும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதற்க்கு பதிலளிக்கும் வகையில் மைத்ரேயன் தனது சமூகவலைதள பக்கத்தில், தான் கூறியது தனிப்பட்ட கருத்து இல்லை எனவும் இது கோடிகணக்கான அதிமுக தொண்டர்களின் கருத்து எனவும் பதிவிட்டிருந்தார்.
இதனை அமைச்சர்கள் பலரும் மறுத்துள்ளனர். இருவரும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இது மைத்ரேயனின் கருத்து எனவும் தெரிவித்தனர்.