இரவில் பால் குடிக்கலாமா!! இதை படித்துவிட்டு அப்புறம் சொல்லுங்க..
இரவில் பால் இரவு உணவு உண்டபின், சிலர் பால் குடிப்பார்கள். தற்காலத்தில் சிலர், படுக்கும்போது, எனர்ஜி பானங்கள் குடிக்கிறார்கள், தூங்கும்போது எனர்ஜி டிரிங் குடித்தால், தூக்கத்திலேயே உடல்வலுவாக, சதைப்பற்றுடன் மாறிவிடும், உடற்பயிற்சிகள் எதுவும் தேவையில்லை என்று யாராவது சாமியார் வந்து சொன்னார்களா என்று தெரியவில்லை, ஆனாலும், தூங்குமுன் சிலர் எனர்ஜி டிரிங் குடிக்கிறார்கள்.
இதனால் நெடுநேரம் தூக்கம் வராமல், விழித்திருப்பதுடன், பானத்தின் தாக்கம் குறைந்த பிறகு, உடல் மிகவும் பலகீனமாகிவிடுகிறது. அதனைப்போக்க, சமையலறையில் உருட்டுவது தொடரும்போதுதான், உடல் எடையும் கூடிவிடுகிறது. எனவே, இரவில் உறங்கும் வேளையில், மனஉறுதி எனும் எனர்ஜியை கைக்கொண்டால், எனர்ஜி பானங்கள் இல்லாத உறக்கம், உடனேவரும்.