இரட்டை கோபுரத்தால் துண்டான அமெரிக்கா..!!நினைவு தினம் அனுசரிப்பு..!!
அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுர தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பளீச்சென்று நின்றுகொண்டிருந்த இரட்டை கோபுரத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
இதனால் உருக்குழைந்த இரட்டை கோபுரம் அடுத்தடுத்து இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை கொண்டு தகர்த்து எரிந்தது அல்கொய்தா இன்றளவும் அதை கண்டவர்களின் மனங்களை பதய வைத்த தருணம் அது.
இந்த துயர சம்பவம் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில், 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த இரட்டை கோபுர தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின்போது சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை முதல், மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU