இரட்டை இலை விவகாரம் : தனிக்கட்சி தொடங்கும் தினகரன்???
இரட்டை இலை சின்னமும் கட்சியும் கைவிட்டு போனதால் தினகரன் அணி வருத்தத்தில் உள்ளது. கட்சியும் சின்னமும் இனி இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு மட்டுமே சொந்தமாகி இருப்பதால் அடுத்த வரும் R.K.நகர் இடைத்தேர்தலில் கட்சி பெயரையும் சின்னத்தையும் தினகரன் தரப்பு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கட்சியிலுள்ள துணை பொதுசெயலாளர் பதவியும் பறிபோய் உள்ளது. R.K.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட தொப்பி சின்னமும் இனி இல்லை. இருந்தாலும் இடைதேர்தலில் தினகரன் கண்டிப்பாக போட்டியிடுவதாக கூறினார். இதனை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக அவர் தனிக்கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ளார். அவரிடம் உள்ள ஆதரவு MLA க்களை வைத்து கொண்டு புதிய கட்சி ஒன்றை இடைதேர்தளுக்கு முன்னதாக அறிவிப்பார் என தெரிகிறது.